தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Thalapathy 65 First Look Day : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தினை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி ‘யோகா தின உரை’

வெளியாகப்போகும் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் - தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்.!!

படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகுவிரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் #Thalapathy65FLDay என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?