Thalapathy 64
தளபதி 64 டீம் சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது பற்றிய தகவலும் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய உறவினர் பிரிட்டோவின் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி என இரண்டு தரமான படங்களை கொடுத்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எச்சத்தை எட்டியுள்ளது எனலாம்.

இதுவரை டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படப்பிடிப்புகள் நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

ஒரு சிறிய ஓய்விற்கு பிறகு டிசம்பர் 1 முதல் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.