Thalapathy 64

Thalapathy 64 Info : தளபதி 64 படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளர் பற்றியுமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை அடுத்து தற்போது AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

தள்ளி போனது நேர்கொண்ட பார்வை ரிலீஸ் – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து விஜய் வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் மோகன் ராஜாவே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த படத்திற்காக விஜயுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.