Thalapathy 63 Cast & Crew

Thalapathy 63 Cast & Crew : தளபதி 63 படத்தின் அறிவிப்பை AGS நிறுவனத்தின் தரப்பில் இருந்து அர்ச்சனா கல்பதி என்பவர் ட்வீட் செய்து உறுதி செய்திருந்தார்.

தளபதி விஜய் சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுத உள்ளார். அனல் அரசு ஸ்டண்ட் பணிகளை கவனிக்க ஜி.வி விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார்.

எடிட்டிங் பணிகளை எல்.ரூபன் கவனிக்க உள்ளார். ஆர்ட் டைரக்டராக முத்துராஜ் பணி பணியாற்ற இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் இருக்கும் மெர்சல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.

 

Thalapathy 63 Press Release