Thalapathy 63 FL Poster Update - Shocking Info | Vijay 63 First Look | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy 63 FL Poster : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான ஆச்சரியத் தகவல் – ரசிகர்களுக்கு இப்படியொரு சர்ப்ரைஸா?

அதேபோல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதில் ஒரு சிக்கல். மெர்சல், சர்கார் படங்களை போல இரண்டு போஸ்டர்கள் அன்று வெளிவராதாம். அதற்கு பதிலாக ஒரேயொரு போஸ்டர் தான் அன்றைய நாளில் வெளிவருமாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.