தலைவர் 173 : ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் மாபெரும் கூட்டணி..!

Web Ads

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளது.

thalaivar 173 movie official annoucement
thalaivar 173 movie official annoucement

தமிழ் சினிமாவில் இரண்டு தூண்களாக இருந்து வருபவர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது தலைவர் 173 வது படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கப் போவதாகவும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனை அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சுந்தர் சி அருணாச்சலம் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. அதேபோல் கமல்ஹாசனை வைத்து 2003 ஆம் ஆண்டு அன்பே சிவம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவர்கள் மூவரும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

தற்போது இந்த அறிக்கையும் புகைப்படங்களும் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

thalaivar 173 movie official annoucement
thalaivar 173 movie official annoucement