Thalaivar 168 Movie
தொடர்ந்து வலுத்து வரும் எதிர்ப்புகளால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த தலைவர் 168 படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 168. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது, இதில் ரஜினிகாந்த் பேசியதும் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தலைவர் 168 படத்தை கைவிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் சன் பிக்சர்ஸ் தொழில் வேறு, கொள்கை வேறு என கூறி இந்த படத்தை கைவிட முடியாது என கூறி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.