வலிமை ரிலீஸுக்கு முன்னரே அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Thala61 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை ரிலீஸுக்கு முன்னரே அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் - தல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க ராஜ் ஐயப்பா, யோகி பாபு, விஜய் டிவி புகழ் என பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு..

இதனைத் தொடர்ந்து அஜித் மீண்டும் மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வலிமை படத்தின் ரிலீஸுக்கு முன்னரே தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வேறொரு கோணத்திற்கு செல்லும் விஜய்யின் மேல்முறையீடு – ஓரிரு நாட்களில் தீர்ப்பு | Thalapathy VIjay

அதாவது அக்டோபர் மாதத்தில் வரும் இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

வலிமை ரிலீஸுக்கு முன்னரே அஜித் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக உள்ளது.