Petta Vs Viswasam Trailer

Thalaivar Vs Thala : பிரபல திரையரங்கம் ஒன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தை பற்றிய அதிரடியான தகவல்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

ரசிகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்படும் எனவும் வேட்டி கட்டு, அடிச்சு தூக்கு ஆகிய பாடல்கள் இரு முறை திரையிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடல் மட்டும் இரண்டு முறை திரையிடப்படும் எனவும் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.