YouTube video

Thala Dhoni About Suriya  Sivakumar : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர்.

நேற்று இவர் தன்னுடைய நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சூர்யாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சூர்யாவின் பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக தல தோனி பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தல தோனி நான் முதன்முதலாக ஹிந்தியில் சிங்கம் படத்தை தான் பார்த்தேன். சூர்யாவின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனை தமிழில் பார்க்குமாறு சிலர் என்னிடம் கூறினார்கள்.

நானும் பார்த்தேன் அவர் அற்புதமான நடிகர். எனக்கு பிடித்தமான நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என பேசியுள்ளார். மேலும் மும்பையில் ஒரு முறை நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.