Thala Ajith Rewind Speech
Thala Ajith Rewind Speech

பல வருடங்களுக்கு முன்பு அஜித் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளார். இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Thala Ajith Rewind Speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தல அஜித்.

இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பிறகு தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரானாவில் இருந்து நம்மை பாதுகாக்க அஜித் சொல்லும் அதிரடி வழிமுறை – காவல்துறை வெளியிட்ட புகைப்படம்.!

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் சினிமாவை விட்டு எப்போதாவது விலக நினைத்துள்ளீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு அஜித் நினைக்கவில்லை முடிவு செய்து விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என முடிவு செய்தேன். ஆனால் காலத்தின் கட்டாயம் என்னை விடவில்லை என கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பே அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. நல்லவேளை அந்த முடிவு நிறைவேறவில்லை என எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.