போஸ்டர் உடன் சிறகடிக்க ஆசை சீரியல் பட குழுவிற்கு விஜய் டிவி வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியல் பெரும்பாலும் அனைவராலும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னேற்றத்தில் இந்த சீரியல் இருந்து வருகிறது.
தற்போது மனோஜ்க்கு வந்த கடிதாசிக்கு முத்து தான் காரணம் என்று பி ஏ பழி போட்டு விட்டதால் கதை பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. ரோகினி குறித்த உண்மை எப்போது தெரியவரும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்துள்ளதாக வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் விஜய் டெலிவிஷன் விருது விழாவில் இந்த சீரியல் அதிக விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.