Ajith Advice About Corona Awareness
Ajith Advice About Corona Awareness

கொரானாவில் இருந்து நம்மை பாதுகாக்க அஜித் வழி சொல்வது போல காவல்துறை மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Ajith Advice About Corona Awareness : கொரானா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கூறி வருகிறது.

மிரட்டலான கதைக்களத்துடன் அஜித்தின் அடுத்த படம், இயக்க போவது இவர் தானா? – ரசிகர்கள் ஷாக்.!

இந்த நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை மீம்ஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஜித்தை வைத்து உருவாக்கியுள்ள அந்த மீம்ஸ் புகைப்படத்தில் கொரானா பரவுகிறது பாதுகாப்பா இருக்கணும் என அஜித் கூறுவது போலவும் அதற்கு ஒரு குழந்தை எப்படி என கேட்க தனிமை அது நம் வலிமை என அஜித் கூறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மீம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.