பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதாபாத்திரம் குறித்து பேசி உள்ளார் சரண்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் மூத்த மருமகளாக நடித்து வருபவர் சரண்யா. இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு மிகவும் குழப்பமாகவே இருந்தது இவர் நல்லவரா? கெட்டவரா? என்று கேட்க ஆரம்பித்தனர்.
இது குறித்து சரண்யாவிடம் கேட்டபோது அவர், முதலில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பார்த்து வருத்தமாக இருந்தது. மேலும் எனது அப்பா இந்த சீரியலில் நடித்து ஆக வேண்டுமா என்று கேட்டார் ஆனால் நான் பொறுமையாக இருந்தேன். இந்த சீரியலில் நான் நடிக்க எடுத்த முடிவு மிகவும் சரியானது. ஆனால் கொஞ்ச நாள் போக எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது அதேபோல் தங்கமயில் கேரக்டர் நெகட்டிவ் கிடையாது பலருடைய வாழ்க்கை இதுபோல இருக்கிறது. மேலும் ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய் சொல்லுவாங்க என்று சொல்லலாம் அதேபோல் இந்த கல்யாணத்திற்காக சில பொய்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மக்கள் தங்கமயில் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.