தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா சார் கல்யாணத்துக்கு நம்ம ஏதாவது செய்யணும் அப்பா என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி அப்பா நம்ம செய்யறத அவங்க வாங்கணுமே என்று சொல்லுகிறார். இல்லப்பா என்கிட்ட ரெண்டு மோதிரம் இருக்கு அதுல ஒன்னு கால் சவரன் இருக்கு மேல கொஞ்சம் காசு சேர்த்து அரை சவரத்துல மோதிரம் வாங்கி சூர்யா சாருக்கு போடலாம் என்ற ஐடியா கொடுக்கிறார். நல்ல ஐடியா தான் மா ஆனா அவருடைய மோந்திர சைஸ் தெரியாம எப்படி எடுக்கிறது என்று அப்பா கேட்கிறார் அதற்கு ஒரு ஐடியா இருக்கு இருப்பா வரேன் என்று வேக வேகமாக சென்று நந்தினி கல்யாணம் அண்ணாவை கூப்பிட்டு உங்களுக்கு நூல் ஜோசியம் பார்க்கிறேன் என்று சூர்யா காதில் விழும் படி பேசுகிறார். உங்களுக்கு மூணு கல்யாணம் ஆகும் 10 குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சொல்ல கல்யாணம் சந்தோஷப்படுகிறார். அதனைப் பார்த்த சூர்யா உடனே கூப்பிட்டு என்ன அங்க கதை விட்டுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். இல்ல சார் இது நூல் ஜோசியம் என்று சொல்ல, என் லைஃப்ல என்ன நடக்கும் என்று சொல்லு என்று சொன்னவுடன் உங்களுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கிறத நிறுத்திடுவீங்க.பிறகு உங்களுக்கு ரெட்டை குழந்தை பொறக்கும் சார் என்று சொல்லுகிறார்.
இந்த கதை எல்லாம் விடாதே. ஃபாஸ்ட் லைஃப் பத்தி சொல்லு என்று சொல்லுகிறார். உடனே மோதிர விரலை காட்டுங்கள் என்று சொல்லி மோதிரத்திற்கான அளவை எடுத்த பிறகு நீங்க காலேஜ் போயிருக்கீங்க,அங்க எல்லா பொண்ணுங்களும் உங்க சைட் அடிச்சிருப்பாங்க, உங்க அம்மாவை உங்களுக்கு பிடிக்காது என்று சூர்யா சொன்னதையே திருப்பி அவரிடம் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறார். சிங்காரத்திடம் வந்து அளவு கிடைச்சிடுச்சுப்பா நான் இந்த அளவுல கல்யாணம் அண்ணனை உடனே கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் புடவை காரில் வந்து இறங்குகிறது. சம்பந்திக்கு போன் போட்ட சுந்தரவல்லி புடவை எல்லாம் வந்துருச்சு நீங்க வாங்க என்று கூப்பிடுகிறார். உடனே அவர்களும் வந்து விட அனைவரும் புடவையை பார்க்கின்றனர். உடனே சுந்தரவல்லி இது காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்பெஷலா வரவச்ச பட்டு சொந்தமா தறியில நெஞ்சு வந்த புது கலெக்ஷன் தான் எல்லாமே, உனக்கு எது புடிச்சிருக்கோ நீயே செலக்ட் பண்ணி எடுத்துக்கோங்க என்று சொல்லுகிறார். அனைவரும் புடவையை எடுத்து அர்ச்சனாவின் மேல் வைத்து பார்க்க இது ஓகேவா என்று கேட்கின்றன ஆனால் அர்ச்சனா வேற பாரு வேற பாரு என்று சூர்யாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். நந்தினி சரஸிடம் எனக்கு பிடிக்கல சூர்யா சாருக்கு ஏத்த அளவுக்கு இவங்க ஒன்னும் அப்படி நல்லா இல்ல என்று சொல்லுகிறார். அதற்கு சரஸ் பணம் இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும் என்ற மாதிரி தான் இருக்கு என்ன பண்றது என்று சொல்லி பேசிக்கொள்கின்றனர். இந்தப் பக்கம் அர்ச்சனா சூர்யாவையே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
சுந்தரவல்லி உனக்கு புடிக்கலனா சொல்லுமா வேற ஷாப்புக்கு கூட போகலாம் என்று சொல்ல வேணாம் ஆண்ட்டி நான் இதுல பார்த்து எடுத்துக்கிறேன் என்று சொல்லுகிறார். மினிஸ்டர் நம்பளுக்கு தான் சம்மந்தி ஒரு பிரச்சனை இல்ல வெள்ளை கலர் வேஷ்டி வாங்கணுமா கட்டினமா? தூக்கி வீசிட்டு போயிட்டே இருக்கலாம் ஆனா இவங்க தேடுறது தான் ஒரு பெரிய வேலை என்று சொல்லுகிறார். நந்தினி அந்த தங்க கலர் புடவை அழகா இருக்கு ஆனா அதைத் தவிர இவங்க மீதி எல்லாம் வச்சு பாக்குறாங்க நீங்க எடுத்து வச்சு காமிங்க அக்கா என்று சரஸ்சிடம் சொல்லுகிறார். சரஸ் நீ வேணா போய் வச்சு காமி நந்தினி என்று சொல்ல அப்படியா நான் போய் வச்சு காட்டவா என்று சொல்ல உடனே நந்தினி அர்ச்சனா மீது புடவையை வைத்து இந்த புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு அப்படித்தானே கா என்று பேசிக் கொண்டிருக்க சுந்தரவல்லி மினிஸ்டர் குடும்பம் என அனைவரும் கோபப்படுகின்றனர். சுந்தரவல்லி கோபமாக வந்து நந்தினியை அறைந்து போக சொல்லுகிறார் அதனை மேலே இருந்து சூர்யா பார்த்து விடுகிறார்.
உடனே அர்ச்சனா சூர்யாவை பார்த்து வா சூர்யா. நீதான் எனக்காக புடவை செலக்ட் பண்ணி தரணும் தாலி கட்டிக்கும் போது நான் எந்த புடவையில் இருக்கணும்னு சொல்லு நான் அதை தான் எடுத்துக்குவேன் என்று சொல்ல சூர்யா அங்கிருந்து வந்து நந்தினி எடுத்துக் கொடுத்த புடவையை அர்ச்சனாவிடம் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சூர்யா அருணாச்சலத்திடம் பாய் டாடி என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். உடனே மினிஸ்டர் மனைவி என்னங்க இதெல்லாம் என் பொண்ணு முகமே மாறிடுச்சு ஒரு வேலைக்காரி எடுத்து கொடுத்து புடவை கட்டணுமா என்று கேட்க அருணாச்சலம் அந்த பொண்ணு எங்க கிராமத்துல தோட்டத்துல வேலை செய்ற பொண்ணுங்க ஒரு ஆர்வத்துல பண்ணிட்டா மன்னிச்சிடுங்க, நீங்க எதுவும் தப்பா நினைக்க வேண்டாம் நீங்க பாருங்க என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி நந்தினி பார்த்த முறைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.