வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.
த.செ ஞானவேல் இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது வேட்டையன் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனைத்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.