Thala Ajith Interview in Jaya TV
Thala Ajith Interview in Jaya TV

தல அஜித்தின் பிறந்த நாளில் அவருடனான பேட்டி வீடியோவை ஒளிபரப்ப உள்ளது டிவி சேனல்.

Thala Ajith Interview in Jaya TV : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மே ஒன்றாம் தேதி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அதற்கான கொண்டாட்டங்களுக்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

ஆனால் அஜித் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என கூறி வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

பெரிய திரையில் ஆத்விக்.. முதல் முறையாக வெளியான வீடியோ – தியேட்டரையே திணற விட்ட அஜித் ரசிகர்கள் – இதோ வீடியோ உள்ளே.!

இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்ப உள்ளது.

அதாவது பில்லா படத்திற்கு பிறகு தல அஜித்தை நடிகர் சந்தானம் பேட்டி எடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது.

இதில் அஜித் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருப்பார். அவர் பேசிய விஷயங்களை தெரிந்து கொள்ள அன்று மறக்காமல் நிகழ்ச்சியை பாருங்கள்.