Thala 61

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணைய உள்ள தல 61 படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thala 61 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இறுதி சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ள பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பக்கா ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

வலிமை படம் முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

அதாவது நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிசா இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சமீபகாலமாக அளித்து வரும் பேட்டிகளில் அஜித்தை பற்றி பேசி வருகிறார் என கூறி வருகின்றனர்.

ஆனால் அஜித்துக்கு ஜோடி சாயிசா தான் என படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.