Thala 61 Heroine Update

தல61 படத்தின் நாயகி குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

Thala 61 Heroine Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

H வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விரைவில் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 61 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அஜித், நயன்தாரா கூட்டணி தல 61 படத்தில் இணைவது உறுதி என்றால் இவர்கள் இருவரும் ஐந்தாவது முறையாக ஜோடி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.