Ajith 61
தல 61 படத்தை முருகதாஸ் இயக்குவார் என தகவல் பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச். வினோத் புத்தம் புதிய ஸ்க்ரிப்டை கொண்டு இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தை இயக்க முருகதாஸ், புஷ்கர் காயத்ரி, சிறுத்தை சிவா மற்றும் கார்த்திக் நரேன் என நான்கு இயக்குனர்கள் போட்டி போட்டு வருவதாகவும் முருகதாசிற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.

ஆனால் தற்போது அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி தல 61 இயக்குனர் முருகதாஸ் இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்த கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.