7.5% உள் ஒதுக்கீட்டுடன் மருத்துவ படிப்புக்கான ரேங்க் லிஸ்ட் வெளியானது !! | Edappadi Palaniswami

Tamilnadu Medical Sheet Rank List : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது.

இதனால் தமிழகம் இந்திய அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. விவசாயத்திலும் இதுவரை இல்லாத அளவு அதிக மகசூல் நடைபெற்றுள்ளது.

மேலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

7.5% உள் ஒதுக்கீட்டுடன் மருத்துவ படிப்புக்கான ரேங்க் லிஸ்ட் வெளியானது !

மேலும் இதன் உள் இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி இந்த வருடத்திற்கான ரேங்க் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார் தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள்.

இந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4061 இடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 7.5% இட ஒதுக்கீட்டிற்காக 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக ஏழை எளிய மாணவ மாணவிகளின் மருத்துவப் படிப்பு கனவு நனவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.