நடிகை தமன்னா சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் பப்ளிபவுசர் திரைப்படம் குறித்து பேசும்போது ஆண் ஆதிக்கம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் “பப்ளி பவுன்சர்”.

இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பப்ளிபவுசர் படம் குறித்து பேட்டி அளித்து வந்த தமன்னா ” நான் நடிக்க வந்த போது ஹீரோயின் என்றாலே திரையில் இப்படித்தான் தோன்ற வேண்டும், இந்த மாதிரி தான் உடை அணிய வேண்டும் என்று இந்த மாதிரியான நிறைய நிபந்தனைகள் இருந்தது. இதுவும் ஒரு வகையான ஆணாதிக்க சிந்தனை தான். ஆனால் தற்பொழுது ஹீரோயின்களுக்கான அந்த பிம்பம் உடைந்து விட்டது, அவர்கள் சுதந்திரமாகி விட்டார்கள். அதனின் அடையாளம் தான் “பப்ளி பவுன்சர்” என்று பேட்டியளித்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.