
T 20 : மே.தீ.-இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடர் நாளை தொடங்க உள்ளது. டி-20 ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆன வலிமை கொண்ட மே.தீ., அணியை வெற்றி கொள்ளுமா இந்திய அணி என பெரிதும் எதிர்ப்பார்க்கபடுகின்றது.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணியை எதிர் கொண்டு வரும் மே.தீ., அணி இந்தியாவை எதிர்க் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்றும், ஒரு நாள் தொடரை 3-1 என்றும் இழந்தது.
அதன் தொடர்ச்சியாக இறுதி கட்ட ஆட்டமாக 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடர் விளையாட உள்ளனர்.
நடப்பு சாம்பியன் மே.தீ.,அணியை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வதுடன் உள்ளனர்.
இந்த நிலையில் நாளை கொல்கத்தாவில் முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் மே.தீ., அணி முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இப்போட்டியிலாவது வெற்றி அடைந்து தனது ரசிகர்களுக்கு ஆறுதல் தர வேண்டும் என்ற முனைப்பில் மே.தீ., அணி களம் இருங்க உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம் :
ரோகித் (கேப்டன்), தவான் , தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, வாஷிங்டன்சுந்தர், சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,பும்ரா,கலீக், உமேஷ் யாதவ், ஹபாஸ் நதீம்.