“தி வாரியர்” படத்தின் இரண்டாவது பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம் பொத்தினேனி. இவர் முதல்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்து நடித்துள்ள படம்தான் “தி வாரியர்”. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் மற்றும் அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லனாக ஆதி பினிசெட்டி போன்று பலர் நடித்து வருகின்றனர்.  

இப்படத்தை ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பவன்குமார் இப்படத்தை வழங்க உள்ளார். இந்த “தி வாரியர்”படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

அதன்பின் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன் பாடிய ‘புல்லட்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்தப் படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான இரண்டாவது பாடல் ஆன ‘விசில்’பாடலை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறி வெளியிட்டிருக்கிறார். அந்தோணிதாசன் மற்றும் ஸ்ரீ நிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இப்பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.