தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிப்படாத சூர்யா 37 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த சூர்யா 37 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வர மோகன் லால், ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தில் சூர்யா மற்றும் மோகன் லாலின் கதாபாத்திரம் குறித்த தகவல் புகைப்படத்துடன் கசிந்துள்ளது. ஆம், இப்படத்தில் மோகன் லால் பிரதமர் வேடத்திலும் சூர்யா அவரின் உதவியாளர் வேடத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. லீக்காகியுள்ள இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.