விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாஸில், நரேன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஒவ்வொருவரும் அவர்களது நடிப்பில் பின்னி பெடல் எடுக்க படத்தின் இறுதியில் ஐந்து நிமிடக் காட்சியில் வந்து சென்ற சூர்யா ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார். 5 நிமிடம் என்றாலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக சூர்யா சம்பளமே வாங்காமல் நடித்தார் என தெரியவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.