Suriya Latest Update
Suriya Latest Update

Suriya Latest Update – சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

அண்மையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற போஸ்டர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இந்த போஸ்டரை பிரபல போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். இவர்தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஜய்யின் அடுத்த படத்திற்கு போஸ்டர் டிசைனர் என்பது கூடுதல் தகவல்.

சூரரைப் போற்று படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.