அடுத்தடுத்த சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

ரோலக்ஸ் வெறும் சாம்பிள் தான்.. அடுத்தடுத்து சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. இரண்டு படங்கள் குறித்து வெளியான மாஸ் தகவல்

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இணைந்து கைவிடப்பட்ட இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாபாத்திரமும் ரோலக்ஸ் போல மாஸாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் நேற்று இன்று நாளை அயலான் போன்ற படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்திலும் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோலக்ஸ் வெறும் சாம்பிள் தான்.. அடுத்தடுத்து சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. இரண்டு படங்கள் குறித்து வெளியான மாஸ் தகவல்

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஹாலிவுட் தரத்தில் தரமான ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.