Suriya in Green India Challenge
Suriya in Green India Challenge

சூர்யா மரம் நட்டு தண்ணீர் பாய்ச்சும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Suriya in Green India Challenge : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஹரி இயக்கத்தில் அருவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது கிரீன் இந்தியா சேலஞ்ச் சமூக வலைதளங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தன்னுடைய பிறந்தநாளை மரக்கன்றை நட்டு நடிகர் விஜய் ஸ்ருதிஹசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் சவால் விட்டிருந்தார்.

முடிஞ்சா இத செய்யுங்க.. தளபதி விஜய்க்கு சவால் விட்ட முன்னணி நடிகர் – ஏற்பாரா விஜய்?(Opens in a new browser tab)

மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் மரக்கன்றை நட்டு சவாலை நிறைவு செய்தனர்.

விஜய் மரக்கன்றை நட்டதும் அஜித் பல வருடங்களுக்கு முன்பு மரக்கன்று நட்ட புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வெளியிடத் தொடங்கினர்.

அந்த வரிசையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிகர் சூர்யா மரக்கன்று நட்டு தண்ணீர் பாய்ச்சிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி லைக்குகளை பெற்று வருகின்றன.