Mahesh Babu Challenge To Vijay

முடிந்தால் இத செய்யுங்கள் என தளபதி விஜய்க்கு சவால் விட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Mahesh Babu Challenge to Vijay : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவந்தனர். இதனால் சமூக வலைதளங்களில் பல டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து நடிகர் மகேஷ்பாபு இந்தியா சேலஞ்ச் என புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஒரு மரம் நட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மற்றவர்களுக்கு இதைப்போன்று சவால் விடுக்க வேண்டும்.

மகேஷ்பாபு தம்முடைய பிறந்தநளில் ஒரு மரக்கன்றை நட்டு அதைப் புகைப்படமாக வெளியிட்டு நடிகர் விஜய், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு டேக் செய்து சவால் விட்டுள்ளார்.

மகேஷ்பாபுவின் சவாலை தளபதி விஜய் ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஏற்பார்களா இல்லது நிராகரிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாக தளபதி விஜய் பொதுவாக படம் சார்ந்த ட்வீட்டுகளை தவிர வேறு எதுவும் பதிவிடுவது இல்லை. இப்படியான நிலையில் மகேஷ்பாபுவின் இந்த சவாலை ஏற்பாரா? என்பதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.