எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகர் சூர்யா.

Suriya in Birthday Celebration Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெய் பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

இந்த நிலையில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படக் குழுவினருடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.