‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்…

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யாவும் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டாவும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சூர்யா தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில்,

‘என்னுடைய 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதார். இப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது’ என்றார்.

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் வெங்கி அட்லூரி. தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தையும் இயக்கியிருக்கிறார். தொடர்ந்து, 2 ஹிட் கொடுத்தவர், தற்போது சூர்யா கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், ‘வாடிவாசல்’ திரைப்பட ஷூட் சற்று தாமதம் ஆனாலும், இந்த வருடம் நடைபெறும் எனவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

suriya announced his next movie director venku atluri