சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் திரிஷா, சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், இந்திரன்ஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

suriya 45 movie title release update