Suriya 40 First Look Release Update

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya 40 First Look Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்திய அணி குறித்து, ரணதுங்கா விமர்சனம் : இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 12ஆம் தேதிக்கு பிறகு தொடங்கி நடைபெறவுள்ளது. இரண்டு வாரங்கள் முழுவதுமாக இந்த படத்தில் படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Simbu க்கு பதில் Action King Arjun ..? Survivor நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? | Tamil HD

மேலும் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.