Suriya 39
சூர்யா 39 ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா, ஹரி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இவர்களை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெற்றிமாறன் ஒரு கதையை கூறி ஓகே செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யா 39 படத்தை வெற்றிமாறன் இயக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வந்தால் தான் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.