டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட சசிகுமார்..!
சசிகுமார் அவர்களை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சசிகுமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தை தேடி வரும் ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தின் ஆபத்தான பயணத்தை உணர்த்தும் படமாக வெளியாகி இருந்தது.
இந்தப் படத்தில் சசிகுமாரின் நடிப்பு பலராலும் பாராட்டுப்பட்ட வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ளார் இது குறித்து சசிகுமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் மகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் படம் சூப்பர் என யார் சொன்னாலும் மனம் சொக்கிப் போகும் சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும் அயோத்தி, நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து சூப்ப்ப்பர் சசிகுமார் என அழுத்தமாக சொன்னார் தர்மதாஸ்ஆகவே வாழ்ந்திருக்கீங்க சொல்ல வார்த்தையே இல்ல அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க பல சீன்களில் கலங்கடிச்சுட்டீங்க சமீபகாலமா உங்களோட கதை தேர்வு வியக்க வைக்குது சசிகுமார் என ரஜினி சார் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram