சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகனின் காலை பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனக்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரணவ் என்ற இரண்டு கைகளையும் இழந்த மாற்று திறனாளியும் சூப்பர் ஸ்டார் சந்திப்பதை தன்னுடைய வாழ்நாள் ஆசையாக வைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தும் அவருடைய ஆசையை நிறைவேற்ற தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து சந்தித்துள்ளார்.

அப்போது பிரணவ் தன்னுடைய காலை கையாக நினைத்து ரஜினிகாந்துடன் கை குலுக்கி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

இதற்கு முன்னதாக பிரணவ் கேரள முதல்வர் பிணராயி விஜயனுடன் இதே போன்று காலை கொடுத்து செல்பி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth rajinikanth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here