Super Star Next

Super Star Next : முதலில் விஜய் பட டைரக்டருடன் ஒரு படம், அப்புறம் அஜித் பட இயக்குனருடன் ஒரு படம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியான முடிவில் இறங்கியுள்ளார்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ட்ராங்கான அரசியல் படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து விட்டது என தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தீரன் படத்தின் இயக்குனர் எச். வினோத்தும் சூப்பர் ஸ்டாரிற்கு ஒரு கதை கூறியுள்ளார்.

கதையை கேட்ட ரஜினி ஒரு சில மாற்றங்களை கூறி நிச்சயம் படம் பண்ணலாம் என கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் முருகதாஸ் படத்திற்கு எச். வினோத் இயக்கத்தில் தலைவர் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.