15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர்.சி-வடிவேலு காம்போ; ‘கேங்ஸ்டர்’ பட ரிலீஸ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், ’கேங்கர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.

அதாவது 2010-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி நடித்த ’நகரம் மறுபக்கம்’ படத்தில் கடைசியாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றினார் வடிவேலு. முன்னதாக, ’வின்னர்’, ’கிரி’, ’லண்டன்’, ’ரெண்டு’, என சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே ‘கேங்ஸ்டர்’ படம் குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ’கேங்கர்ஸ்’ முழு நீள நகைச்சுவை படம். குடும்பத்தோடு பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் சிறப்பான படமாக இருக்கும்’ என கூறியிருந்தார்.

அதற்கேற்ப ‘கேங்கர்ஸ்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள இரண்டு போஸ்டர்களிலும் வடிவேலுவின் தோற்றம் வித்தியாசமாக உள்ளது. படத்தை சுந்தர்.சி கதை நாயகனாகவும் நடித்துள்ளார்.

இப்படத் தலைப்பான ’கேங்கர்ஸ்’ என்ற எழுத்தில் கால்பந்து மற்றும் விசில் போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளது. வடிவேலு தனது கழுத்தில் விசிலை அணிந்துள்ளார், இதனால் ’கேங்கர்ஸ்’ கால்பந்து விளையாட்டு சம்பந்தமாக இருக்கும் என தெரிகிறது.

சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்றமென்ன, அடிக்கப்போற செம வெயிலுக்கு, சில்லுன்னு சிரிச்சுட்டு வருவோம்.!