ரஜினியின் பிறந்தநாளுக்கு சிறப்பு வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அன்றும் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் டிசம்பர் 12ஆம் தேதியான இன்று தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதற்கு திரை வட்டாரமும், ரசிகர்களும் தங்களுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.