Sun Network Treat Ajith

Sun Network Treat Ajith : விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களுக்கு சன் நெட்ஒர்க் நிறுவனம் தீபாவளி ட்ரீட் கொடுத்துள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து கொடுத்துள்ளது. அதே போல தல ரசிகர்களுக்கும் சன் நெட்ஒர்க் நிறுவனம் ட்ரீட் கொடுக்க உள்ளது.

ஆம், சன் நெட்ஒர்க் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான சன் லைஃப் சேனலில் இன்று மாலை 12 மணிக்கு தல அஜித்தின் விவேகம் படத்தை ஒளிபரப்ப உள்ளது.

இதன் மூலம் தல ரசிகர்களுக்கும் தீபாவளி விருந்தை ஏற்பாடு செய்துள்ளது. அதே போல ஜெயா டிவியிலும் மாலை 3 மணிக்கு ஆரம்பம் படம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தல ரசிகர்களுக்கும் தீபாவளி கொண்டாட்டம் இருக்கு என்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.