ரஷ்யா செல்லும் திட்டத்தை பீஸ்ட் படக்குழு மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sudden Changes in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தினை கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக மால் போன்ற ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் ஷூட்டிங் நடந்தது.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

மூன்று வில்லன்களில் ஒருவரான சாகோ மாலியில் உள்ள மக்களை சிறைபிடித்து வைத்துக் கொள்ள அவர்களை விஜய் போராடி மீட்பது போன்ற காட்சிகள் தான் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு செப்டம்பர் 1ஆம் தேதி படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரஷ்யா செல்லும் திட்டத்தை மாற்றி உள்ளது. அதற்கு பதிலாக டெல்லியில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை டெல்லியில் டீஸ்ட் படத்தின் சூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனால் ரஷ்யா செல்லும் திட்டம் என்னவானது என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.