ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயில் படத்தை பார்த்து இயக்குனர்கள் பாராட்டி உள்ளனர்.

Stars Comments About Jail Movie : தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயில் என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தியேட்டர் மூடிடுவாங்கன்னு பயமா இருந்தது – Actor Gautham Karthik OpenTalk | Anandam Vilayadum Veedu

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் வசந்த பாலன் இயக்கி உள்ளார். மேலும் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்ட பிடி செல்வகுமார் அவர்கள் முதல் பிரதி தயாரிப்பாளராக தயாரித்துள்ளார்.

தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி

பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வந்த இந்தப் படம் நீதிமன்றம் வரைச்சென்று அனைத்து பிரச்சனைகளையும் தகர்த்தெறிந்து நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது. இந்த நிலையில் இயக்குனர் சங்கத்தினர் மற்றும் நடிகர்களுக்காக இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த இயக்குனர்கள், பிரபலங்கள் என அனைவரும் இந்த படம் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ