Stalin Advice to Udhayanidhi

முதல்முறையாக தேர்தலில் ஜெயித்த உதயநிதிக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Stalin Advice to Udhayanidhi : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சினிமாவா? அரசியலா?? முதல் முறையாக தேர்தலில் ஜெயித்த உதயநிதிக்கு ஸ்டாலின் அறிவுரை

இந்த நிலையில் உதயநிதிக்கு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது உன்னை மிகுந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த மக்களுக்காக தொகுதிக்கு சென்று வேலையை பார் என கூறியுள்ளார்.

மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன் மேலும் ஒரு படத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று படங்களிலும் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.