SPB Praises Thala Ajith
SPB Praises Thala Ajith

முதல் நாள் சூட்டிங்கிற்கு நல்ல சட்டை இல்லாமல் என்னுடைய மகனின் சட்டையைத்தான் அஜித் வாங்கிச் சென்றார் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

SPB Praises Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக நடிகராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை பல நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். தொடர்ந்து பாடி வருகிறார்.

சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டு கால அனுபவம் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியன தல அஜித்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சத்தமில்லாமல் விஜய் சேதுபதி படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான செம அப்டேட்!

அஜித் என்னுடைய மகன் சரணும் காலேஜ் நண்பர்கள். ஒருமுறை தல அஜித் விளம்பர ஷூட்டிங்கிற்காக நல்ல சட்டை இல்லை என என்னுடைய மகனிடம் சட்டை வாங்க வந்திருந்தார்.

அப்போது அஜித்தை பார்த்ததும் எனக்குப் பிடித்து விட்டது. நல்ல அழகாக இருந்தார்.

அதன் பின்னர் என் நண்பர் ஒருவர் படத்தை இயக்கியிருக்கும் இயக்கிக்கொண்டிருக்கும் போதே அறிமுக நடிகர் ஒருவர் தேவைப்படுவதாக கூறினார்.

எனக்கு அப்போது உடனே அஜித்தின் ஞாபகம் தான் வந்தது. அதன்பின்னர் அஜித்தை பற்றி அவரிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தல அஜித் தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் உயர்ந்தவர் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.