தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அஅன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் குடுபுடுப்பைக்காரன் வேஷத்துடன் புலம்பிக் கொண்டு நந்தினியின் மாமா வர காரில் இருந்து சூர்யா கூப்பிடுகிறார். யார் நீ என்று கேட்க இந்த ஊரிலேயே என்னை பார்த்து யார் என்று கேட்ட முதல் நாள் நீ தான் என்று சொல்லுகிறார். அப்போ இரண்டாவது ஆள் யார் என்று கேட்க அதுவும் நீதான் என்று சொல்லுகிறார் நந்தினியின் மாமா. பிறகு சரக்கு பாட்டில் காட்டி கூப்பிட முதலில் வர மறுத்த நந்தினி மாமா இரண்டாவதாக கூப்பிட்ட உடனே காரில் ஏறி உட்கார்ந்து கொள்கிறார். ஒரு தென்னந்தோப்பிற்கு இருவரும் சென்று குடிக்கின்றன. நந்தினியின் மாமா சூர்யாவிடம் உங்கள் ரேஞ்சுக்கு ராஷ்மிகா, ஹன்சிகா மாதிரி பெரிய லெவலில் பார்க்கலாமே இந்த ஊர்ல வந்து ஏன் தாவணி போட்ட பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க நீ என்ன சொல்ற என்று கேட்கிறார் சூர்யா.
அப்போது அவர் நந்தினி என்னோட மாமா பொண்ணு நான் அவளோட மொரப்பையன் நான் சின்ன வயசுல இருந்தே நந்தினி காதலிச்சுட்டு இருக்கேன் என்று சொல்ல வாவ் சூப்பர் நந்தினியும் காதலிக்கிறார்களா என்று கேட்க அவர் இல்லை என்று சொல்லுகிறார் அப்போ இது காதலே இல்லை என்று சூர்யா சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து நந்தினி வர யோவ் குடுகுடுப்பைக்கார இங்க என்ன பண்ற என்று கேட்க, சூர்யா முகத்தில் இருக்கும் மீசை எடுத்து விட நந்தினி அவருடைய மாமா என்று கண்டுபிடித்து விடுகிறார். என்ன மாமா இதெல்லாம் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கே என்று சொல்ல, சூர்யா உங்க மேல அவ்ளோ லவ் இருக்கு என்று சொல்லுகிறார். எனக்கு எந்த லவ்வோ கல்யாணம் மேல விருப்பம் கிடையாது என்று நந்தினி சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சூர்யா நீங்க பண்றது லவ் கிடையாது ஆசை, அதே மாதிரி நந்தினிக்கும் உங்க மேல ஆசையே வர வைக்கணும், என்று சொல்ல நந்தினியின் மாமா சந்தோஷப்படுகிறார் அதற்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நாளைக்கு காலையில சொல்றேன் என்று சூர்யா சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் நந்தினியின் மாமாவிற்கு கோட் சூட் போட்டு விட்டு நந்தினி இடம் பேச சொல்கிறார். நான் சொல்லித் தராத அப்படியே நந்தினி இடம் பேசு நான் உன் கூடவே இருக்கேன் என்று சொல்ல நீங்க என் கூட இருந்தா நான் அழகா தெரியமாட்டேன் என்று நந்தினியின் மாமா சொல்ல அதற்கு நான் என்ன பண்ணனும் என்று சூர்யா கேட்கிறார். நீ அசிங்கமா மாறனும் என்று சொல்ல,உடனே அங்கு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயியை காட்டுகிறார், உடனே சூர்யா அது அசிங்கமா சூப்பரான கெட்டப் என்று சொல்லி உடனே வேட்டி சட்டையில் மாறுகிறார் சூர்யா.
சூர்யா நந்தினியின் மாமாவிற்கு ஒரு ஹெட் போன் கொடுத்து நான் இதுல சொல்றத நீங்க நந்தினி கிட்ட சொல்லுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கண்மணி அன்போடு காதலன் என்று சொல்ல இதெல்லாம் குழிக்குள்ள இருக்குறப்ப சொல்றது என்று நானே சொல்கிறேன் என்று அவரை ஒரு டயலாக்கை சொல்லுகிறார். மறுபடியும் சூர்யா ஒரு டயலாக் பேச இவர்கள் இருவரும் மாறி மாறி பேசி கொள்கின்றனர். நந்தினி ஒன்றும் புரியாமல் யார்கிட்ட தனியா பேசிட்டு இருக்கேன் என்று திட்டுகிறார்.
நான் அழகா இல்லையா நந்தினி என்று சொல்ல அழகா அங்க பாருங்க என்று சூர்யாவை கைகாட்டி இந்த வெயிலையும் வேலை செய்றவங்க தான் அழகு என்று சொல்ல நந்தினியின் மாமா ஷாக் ஆகிறார்.
நந்தினியும் சூர்யாவும் பேசிக்கொண்டு வர வழியில் நாவல் பழம், கொய்யாக்கா எல்லாம் விற்க சூர்யாவும் நந்தினியும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே வருகின்றனர்.
உடனே சூர்யா போனில் என்னை போட்டோ எடுங்க என்று சொல்ல நந்தினி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து காரில் இருந்து இறங்கி வந்த சுந்தரவல்லி நந்தினி இடமிருந்து வேகமாக போனை புடுங்கி அவனை யாருன்னு நினைச்சுகிட்டு இருக்க நீ செய்ற வேலை எல்லாம் அவனை செய்ய வச்சுக்கிட்டு இருக்கியா அவள சேத்துல இறக்கி விட்டிருக்க, அவன் போடுற ஷூ விலை என்னன்னு உனக்கு தெரியுமா? அவனோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா ?என்று நந்தினி திட்ட உடனே சூர்யா அந்த பொண்ணுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நானா போட்டு கிட்ட கெட்டப் தான் இது என்று சொல்லியும் சுந்தரவல்லி நந்தினியை திட்டி விட்டு அவனை காரில் ஏற சொல்லுங்க என்று சொல்லுகிறார்.
சூர்யாவின் அப்பா சரி வா என்று கூப்பிட சூர்யா கிளம்புகிறார் மறுபடியும் கொஞ்சம் தூரம் போனவுடன் சூர்யாவின் அப்பாவிடம் போனை வாங்கி வந்த சூர்யா எங்க அம்மா எப்பவுமே அப்படிதான் என்று நந்தினிவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வயலில் வேலை செய்பவர்களை கூப்பிட்டு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார். சூர்யாவின் அப்பா இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். மேலும் அவங்க அம்மாவை வெறுப்பேத்துறதுக்கே இப்படி பண்ற என்று நினைத்துக் கொள்கிறார். செல்பி எடுப்பதை பார்த்த சுந்தரவல்லி மீண்டும் கோபம் அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லி குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் இருக்க அந்த நேரம் பார்த்து சுதாகர் ஜெயிலில் இருந்து வந்து விடுகிறார். சூர்யா யார் பா இது என்று கேட்கிறார். சுதாகர் நந்தினியை மிரட்ட, சுந்தரவல்லி நந்தினியை கண்ணு முன்னாடி நிக்காத என திட்டி அனுப்புகிறார்.
நந்தினி சுதாகரிடம் பூர்ண காப்பு நடக்கணும் அதுக்கு நான் என்ன பண்ணனும் என்று கேட்க, நான் வரணும் நீ எனக்கு வேற ஒன்னு தரணும் என்று பேசுகிறார். இதனால் நந்தினி அதிர்ச்சி அடைகிறார். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.