தனுஷ் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். அவரது ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார்.
இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், சந்திப் கிஷன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஏ.ஆர் ரகுமானின் இசை என்றும் சொல்லலாம்.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இட்லி கடையை நடத்தி ஒரு குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்ணின் கதையாக இருக்கும் எனவும் இதற்கு “இட்லி கடை” என்று தலைப்பு வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக இந்த படத்திற்கு ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கப் போவதாகவும், தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே தனுஷ், நித்யா மேனன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.