இந்திய திரையுலகில், ‘பாலிவுட் கிங்’ ஷாருக்கான் மற்றும் அவருடைய மனைவி கௌரிக் கானின் சொந்த வீடு மும்பையில் உள்ளது. மேலும், இந்த வீட்டிற்கான இன்டிரியர் டிசைனிங் வேலைகள் அனைத்தையும் செய்தது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள இந்த 200 கோடி ரூபாய் சொகுசு பங்களாவில் தான், இப்போது ஷாருக்கான் வசித்து வருகிறார். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2001-ம் ஆண்டு அவர் இந்த வீட்டை வாங்கினார். அப்போது தான் இந்த வீட்டிற்கு ‘மன்னத்’ என்று பெயரிடப்பட்டது.
இந்த வீட்டின் இன்டீரியர் டிசைனரான கௌரி கான், தனது கணவருக்காகவே பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்கி இருக்கிறார். அதில் தான் ஷாருக்கான் பெறுகின்ற அனைத்து விருதுகளும் வைக்கப்படுமாம்.
மும்பையில் உள்ள ஷாருக்கானின் இந்த மன்னத் வீடு மிகவும் பிரம்மாண்டமானது. குறிப்பாக, இந்த வீட்டுக்குள் ஒரு அழகிய ரூம் இருக்கிறது. அதில் சாருக்கானின் மனைவி கௌரிகான் தன்னுடைய காலணிகள் அனைத்தையும் அடுக்கி வைத்திருக்கிறாராம்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பல மொழி திரைப்படங்களை பார்ப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஷாருக்கான். ஆகையால், இந்த வீட்டிற்குள் ஒரு மினி தியேட்டரும் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட்ட இந்த மினி தியேட்டர், வெல்வெட் சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஷோலே’ போன்ற படங்களின் போஸ்டர்கள் கூட இந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அரச வம்சத்து மாளிகையாக உருவாக்கப் பெற்றிருக்கிறது. இந்த ஆறு மாடி வீட்டில் லிப்ட் அமைப்பும் உள்ளது.
இதில்.. ‘இதென்ன இன்னொரு தாஜ்மஹாலா; அதிசய வரலாற்றை, பணத்தால் முறியடிக்க முடியுமா? என நெட்டிசங்கள் விமர்சனம் வேறு.
எது எப்படியோ.. வாழ நாலு சுவர் போதும், கடைசியில் ஆறடியும் நிரந்தரமல்ல தானே.!