செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகப் போகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் கோட் படம் பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. வசூலிலும் தொடர்ந்து மிரட்டி வருகிறது.அதனைத் தொடர்ந்து எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் தற்போது செப்டம்பர் 20ஆம் தேதி சில படங்கள் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி இயக்கி தயாரித்த படம் கடைசி உலகப் போர் இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இரண்டாவதாக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் அரிஷ் கல்யாண் நடித்துள்ள ரப்பர் பந்து என்ற படம் வெளியாக உள்ளது.
மூன்றாவதாக இரா.சரவணன் இயக்கத்திலும் சசிகுமார் நடிப்பிலும் வெளியாக உள்ள படம் நந்தன்.
அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படமும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்கள் எதுக்காக வெயிட் பண்றீங்க என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.