SPB Leaked Darbar Scene Details : Rajinikanth, Nayanthara, Yogi Babu, Nivetha Thomas, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

SPB Leaked Darbar Scene Details :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இப்படத்தில் அனிருத் இசையில் எஸ்.பி.பி பாடியிருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதை எஸ்.பி.பி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பாடலின் சூழல் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “போலீஸ் ரஜினியை புகழ்ந்து மக்கள் பாடுகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் ரஜினி, யூனிஃபார்மை எடுத்துவிட்டால் நானும் ஒரு காமென் மேன்தான் என கூறிகொண்டே பாடுகிறார். இதுதான் அந்த பாடலின் சூழல் “ என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.